முன்னேஸ்வரம் இலங்கையில் உள்ள சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது ஆகும். இது புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இக்கோயிலுக்குரிய சில மானிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இக்கோயிலுக்கு உள்வீதி, மாடவீதி, இராஜவீதி என மூன்று வீதிகள் அமைந்துள்ளன.
முன்னேசுவரத்தில் 28 நாட்கள் கொண்ட ஒரு பெருந்திருவிழாவும் 10 நாட்களைக் கொண்ட இன்னோர் திருவிழாவும் இரு திருவிழாக்களாக நடைபெறுகின்றன.
முன்னேஸ்வரம் கோயில் இலங்கையில் உள்ள ஈஸ்வரங்களில் மிகவும் முதன்மையானது. இக்கோயிலில் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர்.